Friday, December 2, 2016

ஆட்டோ சங்கர் மர்மம் என்ன..?





ஆட்டோ சங்கர் (ஜனவரி 21, 1954 – ஏப்ரல் 27, 1995) என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த கொலைக்குற்றவாளியின் புனைப்பெயர் ஆகும். ஆட்டோசங்கரின் இயற்பெயர் கௌரி சங்கர். 1980களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலைகளுக்காக இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1988 - 1989 ஆம் ஆண்டு காலவாக்கில் ஆறு கொலைக்குற்றங்கள் புரிந்தமைக்கான வழக்கில் சங்கர் என்பவரும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர் லலிதா, சுடலை, சம்பத், மோகன், கோவிந்தராஜ், மற்றும் ரவி என்கிற ஆறு நபர்களை கொலை செய்து உடல்களை எரித்தோ அல்லது அவரது வீட்டினுள் தளத்தில் புதைத்தோ கொலைக்குற்றம் புரிந்தார்.

1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆறுமாத கால இடைவெளியில் பதின்ம வயதினை அடைந்த ஒன்பது பெண்கள் சென்னையை ஒட்டியதிருவான்மியூர் பகுதிகளில் காணாமல் போயினர். அவர்களைத் தேடும் வழக்கு விசாரணையின்போது தமிழகக் காவல் துறையினர்தொலைந்துபோன நபர்கள் வரதட்சணை தர இயலாத குடும்பச்சுமை காரணமாக குடும்பத்தினராலேயே விபச்சாரத்திற்காக விற்கப்பட்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் நினைத்தனர். ஆனால் காணாமல் போனவர்களின் உறவினர்களிடம் நடத்திய விசாரணையின்போது வேறு மர்மங்கள்
வெளிப்பட்டன.

                           
திசம்பர் மாதத்தின் பிற்பகுதியில் சுபலட்சுமி என்கிற பள்ளி மாணவி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மதுக்கூடத்தின் முன்னால் தன்னைக் கடத்த முயன்றதாக புகார் அளித்தார். இதன் பின்பு புலனாய்வாளர்கள் நடத்திய விசாரணையில் அந்த மதுக்கூடத்தின் பின்புறம் நடந்த மறைமுகக் கும்பலின் வேலைகள் தெரிய வந்தன. இந்தக் கடத்தல் குற்றங்களின் பின்னணியில் சங்கர் என்கிற ஆட்டோ ஓட்டுனர் இருப்பதையும் கண்டுபிடித்தனர். மேற்கொண்டு நடந்த விசாரணையில் இப்படி கடத்தப்பட்டவர்களைக் கொலைசெய்து அவர்களின் உடல்களை தகனம் செய்தது மட்டுமல்லாமல் வங்கக்கடலிலும் வீசியுள்ள தகவல்கள் வெளிவந்தன. மறுநாள் அந்த ஷங்கர் என்கிற குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஒரே இரவில் இவர் இந்தியா முழுமைக்கும் ”ஆட்டோ சங்கர்” என்கிற பெயரில் அறியப்பட்டார்.




இவரது மரண தண்டனை நிறைவேற்றபடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மாநிலத்தின் செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதிகளுக்காகவே இந்த குற்றங்களை புரிந்ததாக பத்திரிகைகளிடம் கூறி இருந்தார். இவர் கடத்திவரும் பெண்களை அந்தஅரசியல்வாதிகள் வன்புணர்ந்த பின்பு அவர்களின் உடல்களை அப்புறபடுத்தியதையும் பத்திரிக்கையில் கூறி இருந்தார். ஆட்டோ சங்கர்சேலம் மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.