நேதாஜி இறப்பு அறிவிப்பு பற்றி மற்றவர்கள் கருத்து
நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது. நேச நாடுகள் இதை ஒரு தந்திரமாகத்தான் கருதின, நம்பவில்லை. அப்போதைய இந்திய வைஸ்ராய் அர்ச்சிபால்டு வாவெல் தனது டைரியில் " அவர் மறைந்து கொள்வதற்காக இந்த செய்தி கொடுக்கப்படுகிறது என்று சந்தேகிக்கிறேன்" என்று எழுதியுள்ளார். அப்போதிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் நேதாஜி இறப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
நேதாஜியின் உறவினரான போஸ் (Grand nephew) ஜெர்மனியில் 1972 லிருந்து வசித்து வருகிறார். நேதாஜியின் மனைவி ஆனதால் அவரது உறவினரான(Great aunt) எமிலி செனகல், நேதாஜி உயிருடன் இருப்பது தனக்குத் தெரியும் என்று 1973-ல் கூறினாராம். எப்படியென்றால் நேதாஜி 1945க்குப் பிறகு ரஷ்யாவில் இருந்ததாக ராய்முண்ட் செனகல் என்ற ஜெர்மனி பத்திரிக்கையாளர் 1950- ஆரம்பத்தில் எமிலி செனகலிடம் கூறினாராம்
விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
நேதாஜியின் உறவினரான போஸ் (Grand nephew) ஜெர்மனியில் 1972 லிருந்து வசித்து வருகிறார். நேதாஜியின் மனைவி ஆனதால் அவரது உறவினரான(Great aunt) எமிலி செனகல், நேதாஜி உயிருடன் இருப்பது தனக்குத் தெரியும் என்று 1973-ல் கூறினாராம். எப்படியென்றால் நேதாஜி 1945க்குப் பிறகு ரஷ்யாவில் இருந்ததாக ராய்முண்ட் செனகல் என்ற ஜெர்மனி பத்திரிக்கையாளர் 1950- ஆரம்பத்தில் எமிலி செனகலிடம் கூறினாராம்
1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்
- 1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடுதான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம்த்தை அறிய மக்களிடம் அலையை ஏற்ப்படுத்தியது.அதுவே நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுகமாக தூண்டியது.
காபூலில் ஆப்கன் கவர்னர் கோஸ்ட் -இடம் ஆப்கனுக்கான ரஷ்ய தூதர்," மாஸ்கோவில் காங்கிரஸ் அகதிகள் உள்ளனர். அதில் நேதாஜியும் உள்ளார். கிலாசி மலாங்கிற்கு நேதாஜியுடன் நேரடித் தொடர்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
- 1945க்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பின் வியட்னாமின் மரியாதைக்குரிய தலைவர் ஹோஸோமின் - உடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வியட்னாமில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
- 1945 டிசம்பர் 20 அன்று வெளியான செய்திக்குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 1946 நவம்பர் 7 அன்று ராஜா யுவராஜ் தத்தா சிங் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் துணைத்தலைவரான ஷீல் பத்ர யாஜீ நேதாஜி, உயிருடன் இருப்பதாகக் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.
நேதாஜி உயிருடன் இருந்ததற்கு இவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதும் அதைப்பற்றி ஆராய காங்கிரஸ் அரசாங்கம் தயாராக இல்லை.

No comments:
Post a Comment