Wednesday, October 19, 2016

திருச்சூர் கானாடிக்காவு குட்டிச்சாத்தான் ரத்தமும் சத்தமும்..! “யார் நீ, என்ன வேண்டும்?’


இந்தியாவில் பேய் பிடித்தவர்களை விரட்ட, பில்லி சூன்யம், ஏவல் விரட்டுவதற்கென்று பல மாந்திரீகர்கள், கோயில்கள் இருந்தாலும் அதில் புகழ் வாய்ந்ததும், மிகவும் பாரம்பரியமானது கேரள மாநிலம் திருச்சூர் கானாடிக்காவு குட்டிச்சாத்தான் கோயில்தான்.





ஸ்ரீவிஷ்ணு மாயா குட்டிச்சாத்தான் ஆலயத்தின் மடாதிபதி விஷ்ணு பாரதிய சுவாமியிடம் இப்பயங்கரங்களை விரட்ட வந்தவர்களின் அனுபவங்களைக் கேட்டோம். தமிழ்நாட்டில், தேன்கனிக் கோட்டையிலிருந்து வந்திருந்த ஒருவரை அழைத்து அவரது அனுபவத்தை சொல்லச் சொன்னார்...
“ஒரு நாளிரவு நடுச்சாமத்தில் நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்த சத்தம் கேட்டது, வெளியே வந்து பார்த்த போது அங்கே ஒரு கறுப்பு நாய் நின்றுகொண்டு என் வீட்டைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்தது.
இதில் என்ன பயங்கரமென்றால் அந்த நாய் வாயிலிருந்து ஏராளமாய் ரத்தம் ஒழுகிக் கொண்டே தரையெல்லாம் வழிந்து கொண்டேயிருந்து. என்னைக் கடிக்கவும் வந்தது. தப்பித்துப் பிழைத்து காலையில் பார்த்தால் அப்படி ரத்தம் வழிந்த சுவடே இல்லாமல் தரை சுத்தமாக இருந்தது. இப்படி பலதடவை நடக்க இங்கே வந்துதான் பரிகாரம் செய்தேன்!’ என்றார் அவர்.


“இதுபோல் இங்கே கோட்டயத்தில் ஊரை விட்டு ஆற்றோரமாய் வசிக்கும் ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த சம்பவம் இன்னும் பயங்கரம்.. அப்பா அம்மா பக்கத்து ஊருக்குப் போன சமயம், நடுச் சாமத்தில் வாசல் கதவை யாரோ தட்டியிருக்கிறார்கள். வீட்டிலிருந்த சித்தப்பாவுக்கு நடக்க முடியாது. பாட்டிக்கும் கண் தெரியாது. இதனால் இளம் பெண் கீது கதவைத் திறக்க அங்கே தலை விரித்த கோலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்திருக்கிறாள். 

அதுவும் “யார் நீ, என்ன வேண்டும்?’ என்று கேட்க, குடிப்பதற்கு தண்ணீர் வேண்டுமென்றிருக்கிறாள். உள்ளே சென்றவள் தண்ணீர் சொம்புடன் வந்து பார்த்த போது அங்கே யாரும் இல்லை! இப்படி பலமுறை நடந்திருக்கிறது. கடைசியாக ஒருநாள் வந்த அந்தப் பெண்ணிடம் “நீ திருட வந்தியா தண்ணி கேட்க வந்தியா?’என்று கீது கேட்க அந்தப் பெண் பயங்கரமாக சிரித்து விட்டு, “எனக்கா தண்ணீர் இல்லையென்றாய்! எனக்கு தாகம் அதிகமாகிறது நான் ஊருக்கு போயிருக்கும் உன் குடும்பத்தினர் ரத்தத்தை குடித்தால்தான் தாகம் அடங்கும்’ என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.

மறுநாள்
, “நம்ம ஐயா, அம்மா எல்லோருமே பள்ளத்தில் வண்டி கவிழ்ந்து ரத்த வெள்ளமாக கிடக்கிறாங்க’ என்று பண்ணையாட்கள் அழுது கொண்டே வந்து கூற, பாட்டியும், “அந்த மோகினிப் பேய் சொன்னபடியே செய்து விட்டது’ என்று அலறினாள். பின்னர் இங்கு வந்த போதுதான் பரிகார பூஜை செய்து வைத்தேன். இப்போது கீதுவின் பெண்ணே திருமணமாகி நன்றாக இருக்கிறாள்’ என்றார் பாரதிய சுவாமி! இது போன்று பில்லி சூன்யம் ஏவல் என்று பல தீய சக்திகளின் செயல்களிலிருந்தும் விடுபட இந்த குட்டிச்சாத்தான் சுவாமி உதவுகின்றார் என்கிறார். இங்கு பரிகார பூஜை செய்ய பல வெளிநாட்டினரும் வந்து வரிசையில் நிற்பதைப் பார்க்கமுடிந்தது.

No comments:

Post a Comment