Wednesday, October 26, 2016

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ,178 பயணிகள்15 விமான ஊழியர்களுடன் மர்மம் என்ன..?

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 (Indian Airlines Flight 814) பொதுவாக ஐ.சி 814 (IC 814) என்று அழைக்கப்படும். இது நேபாளுக்கும் இந்தியாவிற்கும் இடையே செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகும்.








                           

                             Taliban militia in front of the hijacked plane.


 இந்த விமானம் 1999 ஆம் ஆண்டு December மாதம் 24 ஆம் தியதி வெள்ளிக் கிழமை 178 பயணிகள் மற்றும் 15 விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்டது. இதை பாகிஸ்தானில் இயங்கும் ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழு கடத்தியிருந்தது. இந்தக் கடத்தல் 7 நாட்கள் நீடித்தது. பின்னர் இந்தியச் சிறையில் இருந்த முஷ்டாக் அஹமது சர்கார், அஹமது ஒமர் சையது ஷேக் மற்றும் மெளலானா மசூத் அசார் ஆகியத் தீவிரவாதிகளை விடுவித்தனர். கடத்தப்பட்ட விமானம் ஆப்கானிஸ்தானின் கந்தஹார்விமான நிலையத்தில் கடத்தல்காரர்கள் தரையிறக்கி வைத்திருந்தனர். இவ்விமானம் கடத்தப்பட்ட பின்னர் இந்தியாவின் அமிர்தசரஸ் விமான நிலையம், பாகிஸ்தானின் லாகூர்விமான நிலையம், ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் துபாய் ஆகிய விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டது. இக்கடத்தலில் 17 பயணிகள் காயமடைந்தனர். ரூபின் காட்யால்என்பவர் மரணமடைந்தார்.

Thursday, October 20, 2016

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்?


 இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். 




 

 ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும். மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் ஓர் உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருக்கும் பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது(பிராண சக்தியானது) தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல. இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. 


அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன பிராண சக்தியானது அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உடலுக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல. எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின்(பிராண சக்தி) முயற்சி இப்போது பலிக்காது. மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில சக்திகளும் முயலக்கூடும். 


அது எதிர்மறையான காந்த அலைகளை உருவாக்கும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

பயங்கர ஆபத்தும், அதிசயங்களும் நிறைந்த அமேசான் காடுகள் .........!!!




பயங்கர ஆபத்தும், அதிசயங்களும் நிறைந்த அமேசான் காடுகள் .........!!!

அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். *வருடமெல்லாம் கொட்டும் மழை.
சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த அமேசான்.



அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி




உலகின் மிகப் பெரிய நதியாகும். *கப்பல் போக்குவரத்தின் பொழுது எழும் அலைகளால் பக்கவாட்டு கரைப்பகுதி பாதிக்கப்படுவதால், வருடத்திற்கு வருடம் இந்த நதியின் அகலம் சுமார் 6 அடி கூடிக் கொண்டே போகிறதாம். 1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1500 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் நீளத்தில் ‘நைல்’ நதிக்குதான் முதலிட.


*ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது. இந்த நதிக்கரையில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நதியின் ஊடாகப் பரவி நின்று, அந்த வழியாகச் செல்லும் படகுகளைக் கவிழ்க்கும் வல்லமை பெற்றவை.


* எண்ணற்ற செடிகொடிகளையும் , மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.

*அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன.


*தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.
*ஈல் வகை மீன்கள் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.
*காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.
*அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.
*உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் . அடர்த்தியானதும் இவைதான் .
அமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் .
*எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு.
*பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது .
*பரப்பு 55,00,000 கிமீ² (21,23,562 ச.மைல்).
*வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது . சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறத ு.
*பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.
*இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக ்கும் 10,000- க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும ், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டிகளுக்கு ம் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில வசிக்கிறது.

*உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,800 வகை வண்ணத்துப்பூச்ச ிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).
*அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு , பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது . இங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கு ம் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உணர்த்தும்..

சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைக்கு காரணம் என்ன.?ஆதாரங்கள்என்ன.?




நேதாஜி இறப்பு அறிவிப்பு பற்றி மற்றவர்கள் கருத்து


          

நேதாஜி இறந்துவிட்டதாக ஜப்பான் வானொலியும் அரசாங்கமும் அறிவித்தது. நேச நாடுகள் இதை ஒரு தந்திரமாகத்தான் கருதின, நம்பவில்லை. அப்போதைய இந்திய வைஸ்ராய் அர்ச்சிபால்டு வாவெல் தனது டைரியில் " அவர் மறைந்து கொள்வதற்காக இந்த செய்தி கொடுக்கப்படுகிறது என்று சந்தேகிக்கிறேன்" என்று எழுதியுள்ளார். அப்போதிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் நேதாஜி இறப்பை உறுதி செய்ய மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.






நேதாஜியின் உறவினரான போஸ் (Grand nephew) ஜெர்மனியில் 1972 லிருந்து வசித்து வருகிறார். நேதாஜியின் மனைவி ஆனதால் அவரது உறவினரான(Great aunt) எமிலி செனகல், நேதாஜி உயிருடன் இருப்பது தனக்குத் தெரியும் என்று 1973-ல் கூறினாராம். எப்படியென்றால் நேதாஜி 1945க்குப் பிறகு ரஷ்யாவில் இருந்ததாக ராய்முண்ட் செனகல் என்ற ஜெர்மனி பத்திரிக்கையாளர் 1950- ஆரம்பத்தில் எமிலி செனகலிடம் கூறினாராம்


1945 ஆகஸ்டு 16 க்குப் பிறகு நேதாஜியின் உயிருடன் இருந்ததற்கான ஆதாரங்கள்


விமான விபத்துக்குப் பிறகு நேதாஜி ரஷ்யாவில் காவலில் சில ஆண்டுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1949-ல் ஜோசஃப் ஸ்டாலினும் வ்யாஸ் லால் மொலேடோவ்-ம் நேதாஜி ரஷ்யாவில் தங்கியிருப்பது குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
  • 1949-ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் நேதாஜியை ரஷ்யாவில் சந்தித்ததாகவும் அவருடன் சீனாவில் தங்கியதாகவும் கூறிப்பிட்டார். இவர் இவ்வாறு கூறிய பிற்பாடுதான் இந்தியாவில் நேதாஜியை பற்றிய மர்மம்த்தை அறிய மக்களிடம் அலையை ஏற்ப்படுத்தியது.அதுவே நேருவை ஷா நவாஸ்கான் கமிஷன் அமைக்க மறைமுகமாக தூண்டியது.
மேலும் திடுக்கிட வைக்கும் விஷயம் இந்தியாவின் ரஷ்ய தூதர் Dr. S. ராதாகிருஷ்ணன் நேதாஜியை ரஷ்யாவில் வெளியே தெரியாத இடத்தில் சந்திக்க அனுமதிக்கப்பட்டார் என்பதாகும்.
காபூலில் ஆப்கன் கவர்னர் கோஸ்ட் -இடம் ஆப்கனுக்கான ரஷ்ய தூதர்," மாஸ்கோவில் காங்கிரஸ் அகதிகள் உள்ளனர். அதில் நேதாஜியும் உள்ளார். கிலாசி மலாங்கிற்கு நேதாஜியுடன் நேரடித் தொடர்பு உள்ளது." என்று கூறியுள்ளார்.
  • 1945க்குப் பிறகு அதாவது இரண்டாம் உலகப்போருக்குப் பின் வியட்னாமின் மரியாதைக்குரிய தலைவர் ஹோஸோமின் - உடன் நேதாஜிக்கு நட்பு இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் வியட்னாமில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
  • 1945 டிசம்பர் 20 அன்று வெளியான செய்திக்குறிப்பில் நேதாஜி உயிருடன் இருப்பதாக H.V. காமத் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோலொடோஃப் என்ற ரஷ்ய வெளியுறவு மந்திரி மார்ச் 1946-ல் நேதாஜி ரஷ்யாவில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
  • 1946 நவம்பர் 7 அன்று ராஜா யுவராஜ் தத்தா சிங் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக்கின் துணைத்தலைவரான ஷீல் பத்ர யாஜீ நேதாஜி, உயிருடன் இருப்பதாகக் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.
மாஸ்கோவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள படோல்ஸ்க் இராணுவ ஆவணக் காப்பகத்தில் அலெக்சாண்டர் கொலசிரிகோவ் என்ற warsaw pact-ன் முன்னாள் மேஜர் ஜெனரல் 1996 அக்டோபரில் சில ஆவணங்களைப் பார்த்துள்ளார். அதில் நேதாஜியை ரஷ்யாவில் தங்க வைத்திருப்பதன் பல்வேறு விளைவுகள் குறித்து ஆராய்ந்ததற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதை நகலெடுக்கவோ ஆவண எண் போன்றவற்றைக் குறிப்பெடுக்கவோ அவர் அனுமதிக்கப்படவில்லை.


நேதாஜி உயிருடன் இருந்ததற்கு இவ்வளவு சாட்சியங்கள் இருந்த போதும் அதைப்பற்றி ஆராய காங்கிரஸ் அரசாங்கம் தயாராக இல்லை.

217 பணக்காரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 4000' கோடி டாலரை' திருடிய அவறுக்கு தூக்கு ?

 



இணையத்தளத்தின் 'வைரஸ் மூலம்.217 வங்கிகளில்..
ஒரு கோடி பணக்காரர்களின் வங்கிக் கணக்கிலிருந்து
4000' கோடி அமெரிக்க டாலரை' திருடி'பாலஸ்தீனிய.. மற்றும்..
ஆப்பிரிக்கா நாட்டில் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு
நன்கொடையாக கொடுத்துவிட்டு..தலை மறைவானார்..!


தாய்லாந்தில்' பிடிபட்டு..அமெரிகக போலீசாரிடம் 2013 ல்
ஒப்படைக்கப்பட்டார்..! இதுவரை பாதுகாவலில் இருந்தவருக்கு
இன்று அமெரிக்காவில் 'தூக்கு தண்டனை நிறைவேற்றப்படடது..!

தூக்கு மேடைக்கு சென்ற அவர் சொன்னது..!
என் உயிரைப் பற்றி எனக்கு கவலை இல்லை ஏனென்றால்..!
நான் 'கோடான கோடி' ஏழை மக்களின் உயிரை காப்பாற்றிய
சந்தோஷத்தோடு சாகிறேன்..!' என்று சிரித்துக்கொண்டே
மகிழ்ச்சிபொங்க தூக்குக் கயிரை தனது கழுத்தில் மாட்டிக்கொள்கிறார்...!!!

Wednesday, October 19, 2016

கறுப்பு நிறத் தாஜ் மஹால் மர்மம் என்ன..?


தாஜ் மகால் (Taj Mahal, தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அளவில் பலருக்குத் தெரிந்த ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் மகால் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல்1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.









சமாதி



தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றிவடிவமானது.

இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்குமினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.





ஹுமாயூன் சமாதி. இதுவும், தாஜ்மகாலும் ஒரே கட்டிடக்கலைப் பணியில் அமைந்தவை

இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரைவடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.



கறுப்பு நிறத் தாஜ் மஹால் மர்மம்


தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.

திருச்சூர் கானாடிக்காவு குட்டிச்சாத்தான் ரத்தமும் சத்தமும்..! “யார் நீ, என்ன வேண்டும்?’


இந்தியாவில் பேய் பிடித்தவர்களை விரட்ட, பில்லி சூன்யம், ஏவல் விரட்டுவதற்கென்று பல மாந்திரீகர்கள், கோயில்கள் இருந்தாலும் அதில் புகழ் வாய்ந்ததும், மிகவும் பாரம்பரியமானது கேரள மாநிலம் திருச்சூர் கானாடிக்காவு குட்டிச்சாத்தான் கோயில்தான்.





ஸ்ரீவிஷ்ணு மாயா குட்டிச்சாத்தான் ஆலயத்தின் மடாதிபதி விஷ்ணு பாரதிய சுவாமியிடம் இப்பயங்கரங்களை விரட்ட வந்தவர்களின் அனுபவங்களைக் கேட்டோம். தமிழ்நாட்டில், தேன்கனிக் கோட்டையிலிருந்து வந்திருந்த ஒருவரை அழைத்து அவரது அனுபவத்தை சொல்லச் சொன்னார்...
“ஒரு நாளிரவு நடுச்சாமத்தில் நாய் ஊளையிட்டுக் கொண்டே இருந்த சத்தம் கேட்டது, வெளியே வந்து பார்த்த போது அங்கே ஒரு கறுப்பு நாய் நின்றுகொண்டு என் வீட்டைப் பார்த்து குரைத்துக் கொண்டேயிருந்தது.
இதில் என்ன பயங்கரமென்றால் அந்த நாய் வாயிலிருந்து ஏராளமாய் ரத்தம் ஒழுகிக் கொண்டே தரையெல்லாம் வழிந்து கொண்டேயிருந்து. என்னைக் கடிக்கவும் வந்தது. தப்பித்துப் பிழைத்து காலையில் பார்த்தால் அப்படி ரத்தம் வழிந்த சுவடே இல்லாமல் தரை சுத்தமாக இருந்தது. இப்படி பலதடவை நடக்க இங்கே வந்துதான் பரிகாரம் செய்தேன்!’ என்றார் அவர்.


“இதுபோல் இங்கே கோட்டயத்தில் ஊரை விட்டு ஆற்றோரமாய் வசிக்கும் ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த சம்பவம் இன்னும் பயங்கரம்.. அப்பா அம்மா பக்கத்து ஊருக்குப் போன சமயம், நடுச் சாமத்தில் வாசல் கதவை யாரோ தட்டியிருக்கிறார்கள். வீட்டிலிருந்த சித்தப்பாவுக்கு நடக்க முடியாது. பாட்டிக்கும் கண் தெரியாது. இதனால் இளம் பெண் கீது கதவைத் திறக்க அங்கே தலை விரித்த கோலத்தில் ஒரு பெண் நின்று கொண்டிருந்திருக்கிறாள். 

அதுவும் “யார் நீ, என்ன வேண்டும்?’ என்று கேட்க, குடிப்பதற்கு தண்ணீர் வேண்டுமென்றிருக்கிறாள். உள்ளே சென்றவள் தண்ணீர் சொம்புடன் வந்து பார்த்த போது அங்கே யாரும் இல்லை! இப்படி பலமுறை நடந்திருக்கிறது. கடைசியாக ஒருநாள் வந்த அந்தப் பெண்ணிடம் “நீ திருட வந்தியா தண்ணி கேட்க வந்தியா?’என்று கீது கேட்க அந்தப் பெண் பயங்கரமாக சிரித்து விட்டு, “எனக்கா தண்ணீர் இல்லையென்றாய்! எனக்கு தாகம் அதிகமாகிறது நான் ஊருக்கு போயிருக்கும் உன் குடும்பத்தினர் ரத்தத்தை குடித்தால்தான் தாகம் அடங்கும்’ என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டாள்.

மறுநாள்
, “நம்ம ஐயா, அம்மா எல்லோருமே பள்ளத்தில் வண்டி கவிழ்ந்து ரத்த வெள்ளமாக கிடக்கிறாங்க’ என்று பண்ணையாட்கள் அழுது கொண்டே வந்து கூற, பாட்டியும், “அந்த மோகினிப் பேய் சொன்னபடியே செய்து விட்டது’ என்று அலறினாள். பின்னர் இங்கு வந்த போதுதான் பரிகார பூஜை செய்து வைத்தேன். இப்போது கீதுவின் பெண்ணே திருமணமாகி நன்றாக இருக்கிறாள்’ என்றார் பாரதிய சுவாமி! இது போன்று பில்லி சூன்யம் ஏவல் என்று பல தீய சக்திகளின் செயல்களிலிருந்தும் விடுபட இந்த குட்டிச்சாத்தான் சுவாமி உதவுகின்றார் என்கிறார். இங்கு பரிகார பூஜை செய்ய பல வெளிநாட்டினரும் வந்து வரிசையில் நிற்பதைப் பார்க்கமுடிந்தது.

சூனியம் சாத்தான், சாத்தான் வழிபாடு




சூனியம் அல்லது இருண்ட மாய ( Black magic ) தீய மற்றும் சுயநல நோக்கங்களுக்காக சக்தியினால்  மந்திரம் பயன்படுத்தபடுகிறது.  


வரலாறு...




  சூனியம் தோற்றம் ராபர்ட் எம் பிளேஸ் 2009 புத்தகம், The Black Magic,  கோடிட்டு பழமையான ஆவிகள்  சடங்குகளைச் அறிய முடியும்.

எந்த இடத்தில் ஆன்மீகம் நெருக்கம் அடைய  சூனியக்கார முயற்சிகள் சமாந்திரமான பார்க்கும்  நவீன "சூனியம்" உருவாக்கப்பட்டது என்று கருதபட்டு  சடங்குகள்  நன்மை விளைவுகளை அந்த அதே ஆவிகளை ஏவிவிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  'உயர் மாய "(வெள்ளை) மற்றும்" குறைந்த மாயம் "(கருப்பு) முதன்மையாக இவர்கள் சேவையில் , பயிற்சியாளர் நோக்கத்தின் அடிப்படையிலேயே அவர்களை பார்க்க விரும்பப்பட்டு,  மாய சூனியக்கார இருவரும் ஒரு பரந்த  சடங்கு வரையறை.  விலையுயர்ந்த அல்லது பிரத்தியேக கூறுகள் சம்பந்தப்பட்ட சடங்கு  போது " சில மாய சூனியம்  நல்ல கருத்துகள் நாட்டுப்புற மாய" குறைந்த "கருதலாம் இந்த பரந்த வரையறை பாரபட்சங்களை பாதிக்கப்படுது  மாய சூனியமாக கருதலாம்.

பில்லி சூனியம்


பில்லி சூனியம், கூட, இன்றைய "சூனியதிலும்" தொடர்பு வருகிறது; பிரபல கலாச்சாரத்தில் கற்பனையிலும் ஒன்றாக வரையப்பட்டது. எனினும், hexing சபிப்பதோ சூனியம் நடைமுறை  ஏற்கப்படும் போது, பில்லி சூனியம் அதற்கே உரித்தான தனித்துவமான வரலாறு மற்றும் ஜெரால்ட் கார்ட்னர் மற்றும் Aleister Crowley போன்ற ஐரோப்பிய நாடுகளின் பயிற்சியாளர்கள் உருவாக்கப்பட்டது என்பதை இன்றைய மாந்திரீகத்தில்  அதிகம் தொடர்பு கொண்டவை  என கருதலாம்.



வெள்ளை மாய, போலல்லாமல்,

Tuesday, October 18, 2016

ஆவி ஆவியுலகம் என்கிற தனிப்பட்டஉலகம்..!


No automatic alt text available.



மனிதன் இறப்பிற்குப் பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவி, ஆவியுலகம் என்கிற தனிப்பட்டஉலகில் வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் உயிருடன்இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் தற்கொலை, விபத்துக்கள் போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன. அதாவது ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை.



இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.



ஆவியின் உருவம்


ஆவி குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று ஆவி (பேய்) உருவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்பனை உருவாக்கம்


இதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம்.
விஞ்ஞானம் விளக்க முயற்சிகள்


இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள்.


பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.
கொள்ளிவாயுப் பேய்


சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர்.மெதேன் வாயுவுக்கு தமிழ் நாட்டில் கொள்ளிவாயு என்ற பெயர் வழங்கப்படுகிறது.

பெர்முடா முக்கோணம் சாத்தானின் முக்கோணம் அழைக்கப்படும் காரணம் என்ன.?


பெர்முடா முக்கோணம் (சாத்தானின் முக்கோணம் என்றும் அழைக்கப்படுகிறது) வடஅட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள ஒரு தளர்வாக வரையறுக்கப்பட்டப் பகுதி, அங்கே நிறையவானூர்திகளும் கப்பல்களும் மர்மமான சூழ்நிலைகளில் காணாமல் போயிருப்பதாகக் கூறப்படுகிறது.


    
Bermuda Triangle
Devil's Triangle
Bermuda Triangle.png
One version of the Bermuda Triangle area

அமெரிக்க கடற்படையின் படி, இம்முக்கோணம் இல்லை என்றும் பெயர் புவியியல் பெயர்கள் அமெரிக்க வாரியம் மூலம் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மறைதல்களுக்கு அமானுட ஆற்றல் அல்லது உலகத்திற்கு அப்பாற்பட்ட உயிர் களின் செயல்திறன் காரணமாக இருப்பதாக பொதுமக்கள் நம்புகின்றனர்.

நிறைய நிகழ்வுகள் துல்லியமற்ற விளக்கங்களாக இருந்திருக்கின்றன அல்லது பின்வந்த ஆசிரியரால் சேர்த்துக்கட்டி எழுதப்பட்டனவாக இருக்கின்றன என்பதற்குக் குறிப்பிடத்தக்க ஆவணச் சான்றுகள் உள்ளன. அத்துடன் இந்தக் காணாமல் போன நிகழ்வுகளின் எண்ணிக்கையும் இயல்பும் கடலின் வேறு எந்தப் பகுதிக்கும் ஒத்ததாகவே இருக்கிறது.குறிப்பிடத்தக்க அளவில் புலனாய்வு செய்தும் விளக்க முடியாதிருக்கும் பின்வரும் நிகழ்வுகள் இருக்கவே செய்கின்றன என்பதை நிறைய அதிகாரப்பூர்வ முகவாண்மைகளும் பதிவு செய்துள்ளன.



முக்கோணக் கதையின் வரலாறு



முக்கோண சிந்தனையை எழுத்தில் வெளிப்படுத்திய பத்திரிகைகளில் வந்த முதல் கட்டுரை என்றால் ஈ.வி.டபிள்யூ. ஜோன்ஸ் செப்டம்பர் 16,1950 அன்று வெளியிட்ட செய்தியைத்தான் குறிப்பிட வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பின், ஃபேட் இதழ் 'நமது கொல்லைப் புறத்தில் கடல் மர்மம்' என்ற தலைப்பில் ஜார்ஜ் எக்ஸ். சாண்ட் எழுதிய ஒரு சிறு கட்டுரையை வெளியிட்டது. பல வானூர்திகள் மற்றும் கப்பல்கள் தொலைந்து போனதை இஃது எழுதியிருந்தது. பிளைட் 19 என்னும் அமெரிக்க கடற்படையின் குண்டு வீசும் ஐந்து வானூர்திகள் கொண்ட ஒரு கூட்டம் ஒரு பயிற்சி நடவடிக்கையின்போது தொலைந்து போனதும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மறைவுகள் நிகழும் பிரபலமான முக்கோணப் பகுதிக்கு வரைபடமிட்டது சாண்டின் கட்டுரைதான்.அமெரிக்கன் லெஜன் இதழ் வெளியிட்ட ஏப்ரல் 1962 இதழில் பிளைட் 19 பற்றிய செய்தியை மட்டும் கொண்டு செய்திக் கட்டுரை வெளியானது.
அமானுட விளக்கங்கள்


இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக முக்கோணம் குறித்த எழுத்தாளர்கள் ஏராளமான அமானுட கருத்துகளை பயன்படுத்தியுள்ளனர். புராணவகை தொலைந்த கண்டமான அட்லாண்டிஸில் இருந்து எஞ்சியிருக்கும் நுட்பம் தான் இது என்று ஒரு விளக்கம் கூறுகிறது. சிலசமயம், பஹாமாஸில் பிமினி தீவில் உள்ள பிமினி பாதை என்று அழைக்கப்படும் கடலுக்கடியிலான பாறை உருவாக்கம் அட்லாண்டிஸ் கதையுடன் தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது. இந்த பகுதி சில வரையறைகளின்படி முக்கோணத்திற்குள் அமைகிறது. ஆவியூடாடும் எட்கர் கெய்ஸின் கருத்துகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அட்லாண்டிஸ் ஆதாரம் 1968 ஆம் ஆண்டு கண்டறியப்படும் என்று அவர் கணித்துக் கூறியது, பிமினி பாதையின் கண்டுபிடிப்பைத் தான் குறித்ததாகக் கொண்டனர். நம்புபவர்கள் இதனை ஒரு பாதை, சுவர் அல்லது வேறு கட்டமைப்பின் உருவாக்கம் என்று சொல்கிறார்கள், ஆயினும் மண்ணியல் ஆய்வாளர்கள் இதனை இயற்கையாக அமைந்தது என்கிறார்கள்.


பிற எழுத்தாளர்கள் இந்த நிகழ்வுகளுக்கு வெளிக்கிரகவாசிகளை காரணம் காட்டுகிறார்கள். இந்த கருத்தினை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனதுஅறிவியல் புனைவுத் திரைப்படமான க்ளோஸ் என்கவுன்டர்ஸ் ஆஃப் தி தேர்டு கைன்ட் என்னும் திரைப்படத்தில் பயன்படுத்தினார்.


புகழ்பெற்ற மொழியியலாளரும் அமானுட நிகழ்வுகள் குறித்த பல்வேறு புத்தகங்களின் ஆசிரியருமான சார்லஸ் பெர்லிட்ஸ், இந்த அசாதாரண விளக்கத்துடன் உடன்பட்டார். முக்கோணப் பகுதியில் நிகழும் தொலைதல்களுக்கு அமானுட அல்லது விளக்கமுடியாத சக்திகள் தான் காரணம் என்று அவர் கூறினார்.




கன்னிமரா IV


1955, செப்டம்பர் 26 அன்று பெர்முடாவின் தெற்கே அட்லாண்டிக் பகுதியில் ஒரு சொகுசுப் படகு கட்டுப்பாடில்லாமல் சென்று கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. கடலில் இருந்த சமயத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியும் படகு தப்பித்துக் கொண்டது, ஆனால் அதில் இருந்த ஊழியர்கள் மாயமாகி விட்டார்கள் என்று இந்த சம்பவக் கதைகளில் பொதுவாகக் கூறப்படுகிறது .. 1955 ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவ பட்டியல்களோ ஆகஸ்டு இறுதிவாக்கில் பெர்முடா அருகில் "எடித்" என்னும் ஒரே ஒரு புயல் மட்டுமே வந்ததாகக் குறிப்பிடுகிறது. மற்ற புயல்களில் "புளோரா" கிழக்கே வெகு தொலைவில் வந்தது, "கேதி" படகு மீட்கப்பட்ட பின் தான் வந்தது."எடித்" இந்த படகை கட்டுப்பாடிழந்து கடலுக்குள் போகச் செய்ய நேர்ந்த சமயத்தில் கன்னிமரா IV காலியாகத் தான் இருந்தது. துறைமுகத்தில் தான் நின்று கொண்டிருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.